SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசியல் களம் இறங்கும் முன் ரஜினியுடன் ரகசிய உடன்பாடு: கமல்ஹாசன் பரபரப்பு தகவல்

2018-02-22@ 18:48:10

சென்னை: அரசியலில் குதிப்பதற்கு முன் ரஜினியுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டார் கமல்ஹாசன். காலா படப்பிடிப்பின்போது ரஜினியை நேரில் சந்தித்து இது குறித்து இருவரும் முடிவு செய்துள்ளனர்.இது பற்றி நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது: ஆசான்களைப் பார்ப்பதற்கு முன்பே, நண்பர் ரஜினியை சந்தித்து விட்டேன். அப்போது, சென்னை புறநகரில் காலா படப்பிடிப்பில் அவர் இருந்தார். “சந்திக்கலாமா, அதுவும் ரகசியமாக” என்று கேட்டேன். “எங்கு வரலாம்” என்று பேசி விட்டு, தனியாக காருக்குள் அமர்ந்து பேசினோம். நான் எடுத்த அரசியல் பிரவேச முடிவு, மற்றவர்களுக்குத் தெரியும் முன் அவருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே அந்தச் சந்திப்பு. ‘அப்படியா, எப்ப முடிவெடுத்தீங்க?’ என்று ஆச்சரியமாகக் கேட்டார்.

“மனதளவில் முடிவெடுத்து ரொம்ப நாள் ஆச்சு. ஆனால், காலெடுத்து வைப்பது இப்போதுதான்” என்றேன்.‘எந்தக் காரணம் கொண்டும் கண்ணியம் குறையக் கூடாது’ என்பதுதான் அன்று நாங்கள் பேசிக் கொண்டதில் முக்கியமான வி‌ஷயம். ஆம், “ஒருவேளை எதிரும் புதிருமாக நின்றாலும் மரியாதை குறைந்து விடக்கூடாது. அந்தப் போர் தர்மம் நமக்கு வேண்டும்” என்றேன். “அஃப்கோர்ஸ் கமல்” என்றார் அவர். முடிவெடுத்திருப்பதைச் சொல்ல அன்று சந்தித்தேன் என்றால், “கட்சி கட்டப் புறப்படுகிறேன்” என்று சொல்ல இப்போது சந்தித்தேன். “வரலாமா” என்று கேட்டேன். “சாப்பிட்டிட்டிருக்கேன். முடிச்சிடுறேன் வாங்க” என்றார். ஆனால், நான் போகும்போது சாப்பிட்டுக் கொண்டுதானிருந்தார். ஆம், அவ்வளவு சீக்கிரம் போய்விட்டேன். அதே புரிதலோடுதான் இருக்கிறோம். பேசுகிறோம் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

“ஆமாம்... நீங்ககூட உங்க ரசிகர்கள்கிட்ட, ‘ரஜினியைப் பற்றி ஒரு வார்த்தை தப்பா பேசினீங்கனா எனக்குப் பொல்லாத கோபம் வரும்’ என்று சொன்னீர்கள் என்று கேள்விப்பட்டேன்” என்றார். “ஆமாம், வசவு அரசியல் நமக்குத் தேவையில்லை. நீங்களும் அப்படித்தான் இருக்கணும் என்று நான் சொல்லவே மாட்டேன். ஏன்னா, நீங்க கண்டிப்பா அப்படித்தான் இருக்கீங்கன்னு தெரியும். இல்லாத அரசியல் மாண்பை நாம் இருக்கச் செய்ய வேண்டும். நாமளாவது அதைச் செய்வோம்” என்றேன். நாங்கள் நினைத்திருந்தால் வாடாபோடா நண்பர்களாக வே இருந்திருப்போம். ‘நாங்கள் அப்படி இல்லை’ என்று 25 வயது இளைஞர்களாக இருக்கும்போதே முடிவு செய்து விட்டோம். இவ்வாறு கமல் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ramnathgovind

  மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

 • GuangxiZhuangcele

  தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • chinaexpo

  சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

 • londonbrexit

  சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

 • mexicomigrant

  மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்