SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீடு முன் ஆத்ஆத்மி கட்சியினர் போராட்டம்

2018-02-22@ 17:35:53

டெல்லி; டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டின் முன் ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை செயலாளரை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு எந்த வித ஆதாரமும் இல்லாமலேயே ஆம்ஆத்மி MLA-க்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆம்ஆத்மி அரசை கலைக்கவே இத்தகைய நாடகங்களை அரங்கேற்றுவதாக புகார் தெரிவித்த அவர்கள் மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

இது பற்றி பேசிய ஆம்ஆத்மியை சேர்ந்த ஆல்கா லம்பா, என்ன விதமான ஜனநாயகம் இது. எவ்வித ஆதாரமும் இல்லாமல் எங்கள் கட்சி MLA-க்களை எப்படி கைது செய்யலாம் என வினவினார். குற்றவாளிகள் தொடர்பான ஆதாரங்களை நாங்கள் கொடுத்தும் கைது செய்யாதது ஏன் என்றார். நாங்கள் விசாரணைக்கு எதிராக செயல்படவில்லை, எவ்வித விசாரணைக்கும் தயாராகவே உள்ளோம் என்றார். இந்நிலையில் ஆம்ஆத்மி MLA-க்களை கண்டித்து டெல்லி துணைமுதவர் மணிசிசோடியா வீட்டின் முன் பாரதிய ஜனதாவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிசோடியாவின் உருவ பொம்மையை தீவைத்து எரித்த அவர்கள், முதல்வர் கெஜ்ரிவால் பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

  • scotland_fireacci

    கிளாஸ்கோவின் உலக பிரசித்தி பெற்ற கலைப்பள்ளியில் பயங்கர தீ விபத்து : தீயில் கட்டிடம் எரிந்து நாசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்