SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் இந்திய பெண் விமானி

2018-02-22@ 17:33:51

குஜராத் : போர் விமானத்தை தன்னந்தனியாக இயக்கி பெண் விமானி ஒருவர் சாதனை படைத்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் முதல் முறையாக 3 பெண் விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரத்யேக  பயிற்சிக்குப் பின்னர் பணி அமர்த்தப்பட்டனர்.  அதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆவானி சதுர்வேதி இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றார்.

கடந்த வாரம் வரை இவர் மற்றொரு விமானியின் துணையுடன் போர் விமானங்களில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் குஜராத்தில் உள்ள ஜாம் நகர் விமானப்படை தளத்தில், ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட  எம்.ஐ.ஜி.ல் 21 ரக போர் விமானத்தை ஆவானி சதுர்வேதி தனியாக ஓட்டினார். இதன் மூலம் போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் இந்திய பெண் விமானி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்