SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெ., சொத்துக்களை அபகரிக்கவே அம்ருதா பொய் வழக்கு : தீபா பதில் மனு தாக்கல்

2018-02-22@ 16:56:27

சென்னை; ஜெயலலிதாவின் சொத்துக்களை அபகரிக்க அம்ருதா தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஜெ.தீபா வலியுறுத்தியுள்ளார். மறைந்த ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி பெங்களூருவை சேர்ந்த இளம்பெண் அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்கக் கோரியும், தனக்கு மரபணு சோதனை செய்ய உத்தரவிடக் கோரியும், ஜெயலலிதாவுக்கு வைஷ்ணவ முறைப்படி இறுதி சடங்கு செய்ய கோரியும் உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் அம்ருதா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நிராகரித்த நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்ருதா மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கில் தீபா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.தனது அத்தையின் சொத்துக்களை குறிவைத்தே அம்ருதா பொய்யான வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறியுள்ளார். தனது பாட்டி சந்தியாவிற்கு ஜெயலலிதா மற்றும் ஜெயக்குமார் மட்டுமே வாரிசுகள் என அவர் குறிப்பிட்டுள்ளார். மோசடி பேர்வழியான அம்ருதாவின் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அம்ருதா தொடர்ந்துள்ள வழக்கில் ஏற்கனவே தீபாவின் சகோதரர் தீபக் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு காலஅவகாசம் கோரியுள்ளதால் வழக்கு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்