SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.8,000 கோடியில் உடன்குடி அனல்மின் நிலையம

2012-02-25@ 01:17:50

சென்னை : தமிழக அரசின் நிதி உதவியுடன் ரூ.8,000 கோடி செலவில் உடன்குடி அனல் மின் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதன்மூலம் தமிழகத்துக்கு 1,600 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்து, முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் 1,600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2007ம் ஆண்டு அக்டோபரில் பாரத மிகு மின் நிலையத்துக்கும் (ஙிபிணிலி), தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும் இடையே ஏற்பட்டது.

இதையடுத்து, உடன்குடி மின் கழகம் என்ற ஒரு கூட்டு நிறுவனம் 26.12.2008 அன்று ஏற்படுத்தப்பட்டது. உடன்குடி அனல் மின் திட்டத்தின் மதிப்பீடு ஸி8,000 கோடி என்று கணக்கிடப்பட்டது. இந்த ரூ.8,000 கோடி கடன் மற்றும் பங்கு மூலதன தொகையை உள்ளடக்கியதாகும். பங்கு மூலதன தொகையில் 26 சதவீதம் தமிழ்நாடு மின்சார வாரியத்தாலும், 26 சதவீதம் பாரத மிகுமின் நிறுவனத்தாலும் வழங்கப்படும். எஞ்சிய 48 சதவீத பங்கு மூலதனம் நிதி நிறுவனத்தாலோ அல்லது இந்த திட்டத்தை செயல்படுத்த முன்வரும் தனியார் நிறுவனத்தாலோ வழங்கப்பட வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை செயல் படுத்தக்கூடிய தனியார் நிறுவனம், 2011ம் ஆண்டு மே மாதம் வரை முடிவு செய்யப்படவில்லை.

இந்த திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்றும் பெறப்படவில்லை. இத்திட்டம் செயல்படுத்தப்படாததற்கு பாரத மிகுமின் நிறுவனத்தின் ஒத்துழைப்பின்மையும் ஒரு காரணம். மேற்கூறிய காரணங்களால், உடன்குடி அனல் மின் திட்டம் செயல்படுத்தப் படாமலேயே உள்ளது. “இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளுடன் நான் ஆய்வு செய்தேன்.

உடன்குடி மின் கழகத்தின் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்துவது என்பது இயலாத காரியம் என தெரிய வந்தது. எனவே, தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன், மின்சார வாரியம் மூலமாக மாநில அரசின் திட்டமாகவே இத்திட்டத்தை செயல்படுத்த நான் முடிவு எடுத்துள்ளேன். இத்திட்டத்துக்கான மொத்த செலவினமான ரூ.8,000 கோடியையும் தமிழக அரசே, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பங்கு மூலதனமாக வழங்கும்''.

மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் இத்திட்டத்துக்கான நிலக்கரியை ஒதுக்கீடு செய்து எந்த உத்தரவும் வழங்காத நிலையில், இத்திட்டத்துக்கு தேவையான நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என்பதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தெரிவித்து, அதன் அடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் பெற நடவ டிக்கைகள் எடுக்கப்படும்.

உடன்குடி அனல் மின் திட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் செயல்படுத்துவதன் மூலம், இந்த திட்டத்துக்கு பெரு மின் திட்ட தகுதி சான்றிதழ் கிடைக்கும். இந்த தகுதியின் அடிப்படையில், வரி விலக்குகள் கிடைக்கப் பெற்று, திட்ட செலவுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மேலும், இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 1,600 மெகாவாட் மின்சாரம் முழுமையும் தமிழகத்துக்கே கிடைக்க வழிவகை ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards
how do abortion pill work pristineschool.com misoprostol abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்