SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கயம் அருகே பஸ்கள் மோதல் 2 பெண்கள் பலி 38 பேர் காயம்

2018-02-20@ 02:04:39

காங்கயம்: காங்கயம் அருகே தனியார் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் பலியாகினர். ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூருக்கு நேற்று காலை தனியார் பஸ் ஒன்று சென்றது. இதில் 50 பேர் பயணம் செய்தனர். அதே நேரத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து தாராபுரத்துக்கு மற்றொரு தனியார் பஸ் சென்றது. இதில் 60 பேர் பயணம் செய்தனர். நேற்று காலை 10.40 மணியளவில் திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே ரோட்டின் குறுக்கே ஆடுகள் சென்றதால், திருப்பூர் சென்ற பஸ் சற்று விலகிச்சென்றது. அப்போது எதிரே தாராபுரம் நோக்கி வந்த பஸ் மீது நேருக்கு ேநர் மோதியது. இதில் தாராபுரம் பஸ்சில் வந்த 2 ெபண்கள் இறந்தனர். மேலும் இரண்டு பஸ் டிரைவர்கள் உட்பட 38 பயணிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் ேசர்க்கப்பட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்