SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணவாளக்குறிச்சி ஆலையை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

2018-02-20@ 02:03:58

நாகர்கோவில்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் இந்திய அருமணல் ஆலையானது (ஐஆர்இஎல்) ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். கடந்த ஒரு ஆண்டு காலமாக தமிழக அரசால் போக்குவரத்து அனுமதி வழங்கப்படாததால் இவ்வாலையின் இயக்கம் முற்றிலும் முடங்கியுள்ளது. இம்மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் இந்தநிறுவனம் இயங்குவதற்கு  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனை சந்தித்து சிஆர்இசட் அனுமதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் மாநில அரசாங்கம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பது வேதனையாக உள்ளது. குமரி மாவட்டத்தில் மோனசைட் தாது அதிகப்படியாக உள்ள பகுதியாக 2907 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டும் இந்த சட்டப்படி அந்த நிலத்தை இந்த ஆலைக்கு ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்படுவதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். மேலும் இந்த சட்டப்படி மேற்குறிப்பிட்ட அந்த நிலப்பரப்பில் தனியார் நிறுவனங்கள் செயல்பட முடியாது என்ற தடை தெரிந்திருந்தும் மாநில அரசு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி தனியார் நிறுவனங்களை புறந்தள்ளி இந்திய அருமணல் ஆலை நிறுவனம் தொடர்ந்து செயல்பட நடவடிக்ைக எடுக்க கேட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-06-2018

    21-06-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga_dayceleb1

    சர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின

  • rosesaucesChina

    சீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்

  • KimJongJinpingMeets

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு

  • MtEverestGarbage

    மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை கிடங்காக மாறி வரும் எவரெஸ்ட் சிகரம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்