SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி

2018-02-20@ 02:02:56

தூத்துக்குடி: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தின் கிழக்கு பகுதியில் நேற்று மதியம் 2.30 மணியளவில் ஆத்தூர் அருகே உள்ள  அருணாபுரத்தை சேர்ந்த செல்லப்பா மனைவி பாலம்மாள்(44) என்பவர், தான் கொண்டு வந்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிப்காட் போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி செய்தனர். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நிலம் வாங்குவதற்காக லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் நிலம் வாங்கித் தராமல்  மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசில் புகார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்