SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குற்றம் சாட்டப்பட்டவரின் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அப்பீல் மனு செய்யலாம்

2018-02-20@ 02:02:05

மதுரை: தஞ்சாவூர் மாவட்டம், கருங்குளம் அருகே மின்னத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நிலப்பிரச்னை தொடர்பாக எனது சகோதரர் வெற்றிவேல் 2011ல் கொல்லப்பட்டார். வல்லம் போலீசார் வழக்குப்பதிந்து 9 பேரை கைது செய்தனர். வழக்ைக விசாரித்த தஞ்சாவூர் நீதிமன்றம் 15.6.2015ல் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர், ‘‘தஞ்சை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி ெசய்யப்படுகிறது. இந்த அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மனுதாரர் (கொலையானவரின் சகோதரர்) மனு செய்ய முடியுமா என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதில் யார் பாதிக்கப்பட்டவர், யாருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து பார்க்க வேண்டியுள்ளது. ஒரு சம்பவத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டாலும், அவரால் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் பாதுகாவலர் அல்லது வாரிசுதாரர்கள் மனு செய்யவில்லை. ஆனால், மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அவரும் பாதிக்கப்பட்டவரே. இந்த கொலையால் மனுதாரரும் பாதிக்கப்பட்டுள்ளார்.  எனவே, பாதிக்கப்பட்டவரின் சகோதரரான மனுதாரரும் அப்பீல் செய்ய முடியும்,’’ என உத்தரவிட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்