SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை

2018-02-20@ 02:01:12

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக  முன்னாள் துணைவேந்தர் கணபதி (67), பேராசிரியர் தர்மராஜ் (56) ஆகிேயார் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த இருவர்  மீதான குற்றத்திற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வசம் உறுதியான ஆதாரம் இருப்பதாக தெரிகிறது. லஞ்ச தொகையை கையில் வாங்கியதற்கான ஆதாரம் ரசாயன மை மூலமாக உறுதி செய்யப்பட்டது. மேலும் லஞ்சம் கேட்டதற்கான ஆடியோ டேப் ஆதாரமும் போலீசில் சிக்கியுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் போலீசார் நடத்திய சோதனையில், துணைவேந்தர் அறை மற்றும் அதிகாரிகள் அறையில் கிடைத்த ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். தலைமறைவாக உள்ள தொலைதூர கல்விக்கூட இயக்குநர் மதிவாணன் மீதான குற்றச்சாட்டிற்கும் போலீசாரிடம் ஆதாரம் சிக்கியதாக தெரிகிறது.

கணபதியின் மனைவி சொர்ணலதா, லஞ்ச பணத்தை தனது ஆடையில் பதுக்கியதோடு, அதை கிழித்து கழிவறையில் போட்டு மறைக்க முயன்ற வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றத்தை நிரூபிக்கவும், அவர் ரூபாய் நோட்டுக்களை பதுக்கிய ஆடையை ஆதாரமாக போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குற்றப்பத்திரிகையை விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

  • mexicomigrant

    மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்