SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கை அரசு விடுவித்த 109 தமிழக மீனவர் இன்று வருகை

2018-02-20@ 02:00:13

ராமேஸ்வரம்: இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட 109 தமிழக மீனவர்கள் இன்று மாலை தமிழகம் திரும்புகின்றனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்களில் 109 பேர் மட்டும் கடந்த வாரம் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டனர். விடுவிக்கப்பட்ட காரைக்கால் மற்றும் ராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் தவிர்த்து 27 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் இலங்கை சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்து வருகின்றனர். இவர்களையும் விடுவிக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

விடுதலையான 109 மீனவர்களும் இன்று அதிகாலை காங்கேசன் துறைமுகத்திலிருந்து இலங்கை கடற்படை கப்பலில் அழைத்து வரப்பட்டு,  பகல் 12 மணியளவில் இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். அங்கிருந்து கடலோர காவல்படை கப்பல் மூலம் இவர்கள் இன்று மாலைக்குள் காரைக்கால் துறைமுகம் வந்தடைகின்றனர். அங்கு மீன்துறை மற்றும் புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு பிறகு மீனவர்கள் அனைவரும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊர் செல்வார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்