SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அதிமுக ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டத்தில் மோதல்: எம்எல்ஏ வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக அமைச்சரிடம் நிர்வாகிகள் சரமாரி புகார்

2018-02-20@ 01:59:41

சென்னை: பெரியபாளையத்தில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில், தன்னிச்சையாக செயல்படுகிறார். சத்துணவு காலி பணியிடங்களை நிரப்ப பணம் வாங்குகிறார் என்று எம்எல்ஏ மீது நிர்வாகிகள் சரமாரியாக குற்றம் சாட்டியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் எல்லாபுரம் ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் பெஞ்சமின், மாபா பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் பலராமன் எம்எல்ஏ, விஜயகுமார் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர் சேர்த்தல், உறுப்பினர் அட்டையை புதுப்பித்தல், உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்து பேசினர்.

அப்போது கட்சி நிர்வாகிகள் எழுந்து, ‘‘அதிமுக என்றால் காவல் நிலையம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மதிப்பு இல்லை’’ என்றனர். அதற்கு பலராமன் எம்எல்ஏ, ‘‘விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறி சமாதானம் செய்தார். பின்னர் அமைச்சர் மாபா.பாண்டியராஜன் பேசினார். உடனே, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அம்மினி மகேந்திரன் எழுந்து, ‘‘எல்லாபுரம் ஒன்றியத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்கான லேப்டாப்களை, ஊத்துக்கோட்டையில் வைத்துள்ளனர். அதை இந்த பகுதியிலேயே வைத்திருக்க வேண்டும். எந்த தகவலும் எம்எல்ஏ விஜயகுமார் எங்களுக்கு சொல்வதில்லை’’ என புகார் கூறினார்.

இதை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரனும் வழிமொழிந்து, ‘‘எந்த தகவலும் எம்எல்ஏ சொல்வதில்லை. தன்னிச்சயைாக செயல்படுகிறார். இலவச ஆடு, மாடுகள் வழங்குவதற்கான விழா குறித்தும் எந்த தகவலும் தருவதில்லை. சத்துணவு காலி பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும்போது, கையூட்டு வாங்க கூடாது என முதலமைச்சரும், அமைச்சர்களும் கூறுகின்றனர். ஆனால், எம்எல்ஏ விஜயகுமார், சத்துணவு வேலைக்கு ஆட்களை சேர்ப்பதற்கு பணம் பெற்று கொள்கிறார். இதற்கு ஒரு முடிவு வேண்டும்’’ என்றார்.

இதனால் அதிர்ந்துபோன அமைச்சர் மாபா.பாண்டியராஜன், உங்கள் பிரச்னைகள் அனைத்துக்கும் முடிவு எடுக்கப்படும் கூரி சமதானம் செய்தார். அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், எம்எல்ஏ மீது அமைச்சரிடம் தொடர்ந்து நிர்வாகிகள் மாறிமாறி புகார் கூறியதால், அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

மாமன், மைத்துனரை மோதவிட்ட அணி
எம்எல்ஏ விஜயகுமார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியிலும், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஓ.பன்னீர்செல்வம் அணியிலும் உள்ளனர். இதனால், அவர்களுக்குள் மோதல் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால், உறவு முறையில் இருவரும் மாமன், மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

 • florence&trumph

  பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

 • greenlandicemelt

  கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

 • thirupathilast

  திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்