SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓபிஎஸ் மீண்டும் திட்டவட்டம் பிரதமரின் ஆலோசனைப்படியே இரு அணிகளும் இணைந்தோம்

2018-02-20@ 01:59:33

மதுரை: மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்று வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டிடிவி. தினகரன் என்னை பாஜக ஏஜென்ட் என கூறுவது தவறு. அவருக்கு ஞாபக மறதி அதிகம். ஜெயலலிதா இறந்த பின்பு என்னை முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என சசிகலா மற்றும் கட்சியினர் வலியுறுத்தினர். நான் முதலில் மறுத்தேன். கட்சிக்கும், ஆட்சிக்கும் பிரச்னை உள்ளது. நீங்கள் பொறுப்பேற்றால்தான் கட்சியை சிறப்பாக வழிநடத்த முடியும் என கேட்டுக் கொண்டனர். கட்சியின் நலன் கருதி, முதல்வர் பொறுப்பை ஏற்றேன்.
 நான் முதல்வராக இருந்த போது வர்தா புயல், ஜல்லிக்கட்டு பிரச்னை, சென்னை குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டேன்.

இதனால் எனது பேரும், புகழும் உயர்ந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத சசிகலா மற்றும் தினகரன், என்னை முதல்வர் பதவியில் இருந்து காலி செய்ய வேண்டும் என நினைத்து, பதவி விலகுமாறு கூறி கட்டாயப்படுத்தினர். அவர்கள் நினைத்ததை செய்து முடித்தனர். இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன்.  தினகரன் ஞாபக சக்தி குறைந்தவர். இதை அவருக்கு ஞாபகப்படுத்த வேண்டும். சசிகலா கொடுத்த நெருக்கடிகளுக்கு வேறு நபராக இருந்தால் நிச்சயம் தற்கொலை செய்து கொண்டிருப்பார். இவ்வாறு அவர் கூறினார். ‘கமல் அரசியல் கட்சி துவக்க இருக்கிறாரே?’ என்று நிருபர்கள் கேட்டபோது, ‘அவர் கட்சி துவக்கட்டும்,  தேர்தல் வரும் போது பார்த்து கொள்ளலாம்’ என்றார்.

பிரதமரிடம் ஆலோசித்தபிறகே இணைந்தோம்: மதுரையிலிருந்து சென்னை செல்லும் வழியில் விமானநிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘இரட்டை இலை சின்னமும்,  தலைமை கழகமும் கிடைப்பதற்காக ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் அதிமுக இணைய பாடுபட்டோம். பிரதமர் மோடியிடம் கலந்து ஆலோசனை கேட்டபோது, அவர்தான் இணையச் சொன்னார். அதன்படியே இணைந்தோம். மத்திய அரசின் திட்டங்களில் ஜெயலலிதா எந்த நிலையை எடுத்தாரோ அதே நிலையையே நாங்களும் கடைபிடிக்கிறோம். பாஜகவுடன் கூட்டணி எதுவுமில்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டதே இதற்கு உதாரணம்,’’ என்றார்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kashmirfiring

  ஜம்மு-காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு இறுதி மரியாதை

 • CongoViolenceHunger

  பேரழிவின் பிடியில் காங்கோ: பட்டினி, ஊட்டச்சத்து குறைபாட்டால் 2 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்!

 • Melmaruvathurlake

  மேல்மருவத்தூர் ஏரியில் குவிந்துள்ள பறவைகளின் ரம்மியமான காட்சி

 • 23-03-2018

  23-03-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tiruvannamalaielephant

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் யானை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்