SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திராவில் 5 தமிழர்கள் மர்மசாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மை கண்டறிய வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

2018-02-20@ 01:46:09

கோவை: ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேற்று கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரியில் 5 தமிழர்கள் இறந்து கிடந்துள்ளனர். இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆந்திர அரசிடம் தமிழக அரசு விளக்க அறிக்கை பெறவேண்டும். தமிழர்களின் இறப்பில் சந்தேகம் இருந்தால் சி.பி.ஐ விசாரணை நடத்தி உண்மையை கண்டறியவேண்டும்.

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதி எதுவும் கிடையாது. முகாமில் அடைக்காமல் அவர்களை சுதந்திரமாக வாழ அனுமதிக்கவேண்டும். உலகில் பல்வேறு பகுதியில் உள்ள தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தமிழர் மீதான தாக்குதலை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியாயப்படுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

  • scotland_fireacci

    கிளாஸ்கோவின் உலக பிரசித்தி பெற்ற கலைப்பள்ளியில் பயங்கர தீ விபத்து : தீயில் கட்டிடம் எரிந்து நாசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்