SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடிநீர் நம் உயிர்நீர்

2018-02-20@ 01:08:57

தமிழகம் மற்றும் புதுவையில் இனிவரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் அலாரம் அடித்துள்ளது. பருவமழை பொய்த்து போனதால் குளிர் காலத்திலிருந்து கோடை காலத்தை நோக்கி காலநிலை வேகமாக  மாறத் துவங்கியுள்ளது.
இதன் விளைவாக தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இனிவரும் நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த அபாய எச்சரிக்கை மக்களுக்கு சோகத்தையும், குடிநீர் விற்பனை செய்பவர்களுக்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் வழங்குவதில் உள்ளாட்சி அமைப்புகள் தோல்வியடைந்து விட்டன.

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள குடிநீர் விற்பனையாளர்கள்,  டாஸ்மாக் சரக்கு விற்பனையை போல இரண்டு மடங்கு அளவிற்கு தமிழகத்தில் தண்ணீர் விற்பனையை  நடத்தி வருகின்றனர். நமது கவலையெல்லாம், இப்படி கேன்களில் அடைத்து விநியோகம் செய்யப்படும் குடிநீர் சுத்தமானதாக உள்ளதா என்பது தான். கோடிகளில் புரளும் தொழிலாக மட்டுமின்றி போட்டி நிறைந்ததாகவும் குடிநீர் வியாபாரம் மாறியுள்ளது. மக்கள் அன்றாட வருவாயில் 20 சதவீதத்தை குடிநீருக்கு செலவு செய்யும் நிலையில் தமிழகம் மாறி வருகிறது. மேல்தட்டு மக்கள் மட்டுமின்றி ஏழை, எளிய மக்களும் கேன் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் நிலத்தடி நீர்வளம் அதிகமுள்ள இடங்களைச் சுற்றிக் குடிநீர் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல ஆலைகளில் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வழங்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து 2004ம் ஆண்டு முதல் ஐஎஸ்ஐ சான்றிதழ் பெறுவதை இந்திய தரநிர்ணய நிறுவனம் கட்டாயமாக்கியது. தமிழகம் முழுவதும் தற்போது ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற குடிநீர் ஆலைகள் செயல்படுகின்றன. புதிதாக ஆலை தொடங்குவதற்கு அனுமதி கேட்டு 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன. ஆனால், பல இடங்களில் முறைகேடாக, அனுமதியில்லாமல் ஆயிரக்கணக்கான குடிநீர் ஆலைகள் இயங்கி வருகின்றன.

 தரச்சான்றிதழ் கட்டுப்பாடு இல்லாமல் இவை குடிநீர் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. அத்துடன் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கான அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி, உணவுத்துறையின் அனுமதி, இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் சோதனை ஆகியவற்றை கடைபிடிக்காமல் இயங்கி வருகின்றன.
இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாக, இந்த ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.  மனிதர்கள் வாழ்வதற்கான ஆதாரமான குடிநீரில் கலப்படம் செய்யப்படுவது உடனடியாக தடுக்கப்பட வேண்டும். கோடைக்காலத்தை குறிவைத்து இறங்கியுள்ள போலி குடிநீர் நிறுவனங்கள் மீது தயவு தாட்சண்யமின்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • lari_petrol11

  டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

 • volcano_erimalai1

  467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

 • macedonia_makkal1

  நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

 • thiruchi_kaarmegam1

  திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

 • scotland_fireacci

  கிளாஸ்கோவின் உலக பிரசித்தி பெற்ற கலைப்பள்ளியில் பயங்கர தீ விபத்து : தீயில் கட்டிடம் எரிந்து நாசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்