SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடியில் இளம்பெண் கடத்தி கொலை தொழில் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கு நகைக்காக கொன்ற உறவினர் கைது

2018-02-19@ 01:16:15

தூத்துக்குடி: தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாரிச்செல்வத்தின் மனைவி உமா மகேஷ்வரி(28). நேற்று முன்தினம் மதியம் தூத்துக்குடி ஜோதிநகர் காட்டுப்பகுதியில், சடலமாக கிடந்தார். அருகில் அவரது 2வது மகன் லிகிலேஷ் முத்துராம் பால் பாட்டிலுடன் அழுது கொண்டிருந்தான். இதுகுறித்து சிப்காட் போலீசார் நடத்திய விசாரணையில்  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களது மகன் லிகிலேஸ் கூறிய தகவலின்படி உமாவை பாளை கேடிசி நகரைச் சேர்ந்த அவரது மாமா முத்துராமலிங்கம் மகனான கார் டிரைவர் சுரேஷ் என்ற சிவசுப்பிரமணியன் (29) காரில் ஏற்றிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், சுரேஷ் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உறவினர் என்ற முறையில் உமாவிடம் பணம் கேட்டுள்ளார். தனது 2 பவுன் வளையல்களை கழற்றிக் கொடுத்துள்ளார். கூடுதலாக  பணம் தேவை என்பதால் உமாவின் தாலி செயினை கேட்டுள்ளார்.

அதை தர அவர் மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. ஜோதிநகர் பகுதிக்கு சென்றதும் உமாவிடம் இருந்து வலுக்கட்டாயமாக தாலி செயினை பறிக்க முயன்று, குழந்தை கண் முன்னேயே துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து சுரேஷை போலீசார் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

  • mexicomigrant

    மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்