SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்‘நாடக’ பிடிவாதம்

2018-02-19@ 00:28:58

கா விரி நதி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து ஏறத்தாழ 800 கி.மீ தூரம் ஓடி கடலில் கலக்கிறது. இதில் அதிகபட்சமாக 416 கி.மீ தூரம் தமிழகத்திலேயே காவிரி பயணிக்கிறது. டெல்டா மாவட்டங்களை வளப்படுத்தும் காவிரியை தமிழகம் தாயாக மதித்து கொண்டாடி வருகிறது. தமிழகம் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பிரச்னை கடந்த 44 ஆண்டுகளாக இழுபறியாகவே இருந்தது. காவிரி பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் கடந்த 16ம் தேதி வழங்கிய தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். காவிரி நடுவர் மன்றம் கடந்த காலத்தில் வழங்கிய தீர்ப்பை திருத்தியதோடு, தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த காவிரி நீரில் 14.75 டிஎம்சியை குறைத்தும் உத்தரவிட்டது.

காவிரி நதிநீர் உரிமையில் நாம் காலம் காலமாக காயப்பட்டு கொண்டே இருக்கிறோம். 1924ம் ஆண்டில் காவிரியில் 575 டிஎம்சி தண்ணீரை பெற்ற தமிழகம், 1991ம் ஆண்டில் 205 டிஎம்சி தண்ணீரை உத்தரவாதப்படுத்த போராடியது. 2007ம் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி அதன் அளவு 192 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. இப்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி 177.25 டிஎம்சியாக அளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டு காலக்கட்டத்தில் தமிழகத்தில் தண்ணீரின் தேவை அதிகரித்து கொண்டே போக, காவிரியை பொறுத்தவரை நமது இழப்பீடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல.
மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத கர்நாடகம், காவிரி பிரச்னையில் அரசியல் ஆதாயத்திற்காக ஆடிய நாடகங்களே அதிகம்.

 பெரும் நகரமாக உருவாகிவரும் பெங்களூரின் குடிநீர் தேவை அதிகமாகி விட்டது. தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகம் உள்ளிட்ட சாராம்சங்களை கர்நாடகா தற்போது முன்வைத்தது. கர்நாடகா வக்கீல்கள் அதையே சுப்ரீம் கோர்ட்டில் வலுவாக எடுத்துரைத்தனர். கர்நாடகாவிற்கு ஓரளவுக்கு அதில் வெற்றியும் கிட்டியுள்ளது. காவிரி நடுவர் மன்றம், காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தைகள் கர்நாடகாவிற்கு எப்போதுமே கசக்கும். அதையே முதல்வர் சித்தராமையாவும் இப்போது வெளிப்படுத்தியுள்ளார். கர்நாடகாவிற்கு 14.75 டிஎம்சி நீர் அதிகரிப்பு என்ற தீர்ப்பை முதல்நாளில் மகிழ்ச்சியோடு வரவேற்ற அவர், மறுநாளே மேலாண்மை வாரியத்தை கரித்து கொட்டினார். மேலாண்மை வாரியம் அமைக்க காலக்ெகடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.

கர்நாடகா முதல்வரின் இந்த பேச்சு தமிழகத்திற்கு இனிமேலும் காவிரி நீர் முறையாக கிடைக்குமா என்பதை சந்தேகம் கொள்ள வைக்கிறது. 15 ஆண்டுகள் மேல்முறையீட்டுக்கே வழியில்லாத இந்த தீர்ப்பில் தமிழகம் வஞ்சிக்கப்படாமல், குறைந்தபட்ச தண்ணீரை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு தமிழக அரசிற்கே உள்ளது. காவிரி தீர்ப்பில் இம்முறை சுப்ரீம் கோர்ட் நிலத்தடி நீர்மட்டத்தையும் கணக்கில் கொண்டிருப்பது இருமாநில அரசியல் பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பாரம்பரிய சாகுபடி உரிமையை மெல்ல மெல்ல தமிழகம் இழந்து வருகிறது. அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு விரைந்து கூட்டி, விவசாய சங்கங்களின் பங்களிப்போடு காவிரி பிரச்னை தொடர்பான ஒருமித்த கருத்துக்கு வருவதே நல்லது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்