SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

12 போலீஸ் அதிகாரிகள் டி.ஐ.ஜி.களாக பதவி உயர்வு

2018-02-15@ 05:49:32

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி, தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான குழு போலீஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுக்கான பட்டியல் ஒன்றை தயாரித்தது. அதன்பேரில் எஸ்.பி.களாக உள்ள செந்தில்வேலன்(மத்திய அரசு பணி), அவனிஷ் குமார்(மத்திய அரசு பணி), அஸ்ரா கார்க் (சி.பி.ஐ), ஏ.ஜி.பாபு (சி.பி.சி.ஐ.டி) செந்தில்குமாரி (பொருளாதார குற்றப்பிரிவு), துரைகுமார் (சி.பி.சி.ஐ.டி) மகேஸ்வரி (தெற்கு மண்டல போக்குவரத்து), ராதிகா (லஞ்ச ஒழிப்பு துறை), லலிதா லட்சுமி (பொருளாதார குற்றப்பிரிவு), அசியம்மாள்(சி.பி.சி.ஐ.டி) ஜெயகவுரி (மெட்ரோ ரயில்), காமினி ஆகிய 12 போலீஸ் அதிகாரிகளை டி.ஐ.ஜி.களாக பதவி உயர்த்த  தீர்மானித்தது. அதன்பேரில் அந்த 12 போலீஸ் அதிகாரிகளின் பெயர்களை தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியது.இதற்கு  . உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.தற்போது எஸ்.பி.க்களாக உள்ள 12 அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி.களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இவர்களுக்கு விரைவில் பணி வழங்கப்படும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X