SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5 ஆண்டு முடிவதற்கு முன்பே சிகிச்சை, படிப்பு செலவுகளுக்கு பிபிஎப் பணம் எடுக்க முடியுமா?

2018-02-15@ 01:54:22

புதுடெல்லி: மருத்துவ சிகிச்சை, குழந்தைகளின் உயர்கல்வி செலவுகளுக்கு பிபிஎப் பணத்தை 5 ஆண்டுக்கு முன்பே எடுக்க அனுமதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பரிசீலனை செய்து வருகிறது. சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் சேமிப்பு பழக்கம் மாறவில்லை. வட்டி அதிகம் உள்ள திட்டங்களில் பிபிஎப்பும் ஒன்று. பொது சேமநல நிதி எனப்படும் இதில் முன்பு 12 சதவீத வட்டி இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்து 7.6 சதவீதமாக உள்ளது. பிபிஎப் முதலீடு, அதில் இருந்து கிடைக்கும் வட்டி,  முதிர்வு தொகை ஆகியவற்றுக்கும் வரி கிடையாது.

எவ்வளவு முதலீடு  செய்யலாம்?

இந்த திட்டத்தில் ஒரு நிதியாண்டில் குறைந்த பட்சம் 500 ரூபாய்  முதல் அதிக பட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டு காலம் 15 ஆண்டுகள். 15 ஆண்டுக்கு முன்பு கணக்கை மூடிவிட்டு முழு பணத்தையும் எடுக்க முடியாது. இருப்பினும், 5 நிதியாண்டுகள் முடிவடைந்து, முதலீடு செய்தவர் அல்லது அவரது மனைவி மகன், சார்ந்து வாழும் பெற்றோர் ஆகியோருக்கு உயிருக்கு ஆபத்தான நோய் சிகிச்சை, உயர் கல்வி போன்றவற்றுக்கு மட்டும் நிபந்தனை விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுவதுண்டு.
 புதிய சலுகை வருகிறது

பிபிஎப் திட்ட முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், முதலீட்டாளர்கள் தேவைப்படும்போது பணத்தை எடுக்கும் விதத்திலும் புதிய சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி 5 ஆண்டுக்கு முன்பே மருத்துவ சிகிச்சை, உயர்கல்வி செலவு போன்றவற்றுக்கு பணம் எடுக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. அதேநேரத்தில், வட்டி, வரிச்சலுகைகளில் மாற்றங்கள் இருக்காது. விதிகள் மிக எளிமையாக இருக்கும்.

இதற்கேற்ப சேமிப்பு ஆவணங்கள் சட்டம், பிபிஎப் நிதி சட்டம்,  அரசு சேமிப்பு வங்கி சட்டம் ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, முதலீடு செய்தவர் இறந்து விட்டால் அவரது வாரிசுதாரருக்கு பலன் கிடைப்பதற்கான விதிகள் மிக தெளிவாக வரையறை செய்யப்பட உள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.  தற்போது ஜனவரி - மார்ச் காலாண்டுக்கான பிபிஎப் வட்டி 7.6 சதவீதம். இதில் தற்போது மாற்றம் இருக்காது. பிற சேமிப்பு திட்டங்கள் போல காலாண்டு அடிப்படையில் மாற்றப்படும் எனவும் நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

 பிபிஎப்பில் தற்போது உள்ள விதிகளின்படி 5 ஆண்டுக்கு பிறகே நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணம் எடுக்கலாம்.

 5 ஆண்டுக்கு பிறகும் தற்போதைய விதிகளின்படி முழு பணமும் எடுக்க முடியாது. இதில் லோன் கேட்டு விண்ணப்பிக்கும்போது எவ்வளவு வட்டி தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறதோ, அதை விட 2 சதவீதம் கூடுதலாக வட்டி வசூலிக்கப்படும். 36 மாதங்களுக்குள் இதை திருப்பி செலுத்த வேண்டும்.

 வட்டி, இதர வரிச்சலுகைகளை மாற்றாமல் எளிமையான விதிகள், நடைமுறைகள் புகுத்தப்படும்.

 பிபிஎப்பில் ஒரு நிதியாண்டில் குறைந்த பட்சம்  500 ரூபாய்  முதல் அதிக பட்சம் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-02-2018

  25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • jeyalalithabdystatue

  ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

 • SouthAfricaCapitalWater

  உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

 • somalia_bomb_blast

  சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

 • sirya_dead123

  சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X