SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேரளாவில் மார்ச் 1 முதல் பஸ் கட்டணம் உயர்வு : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

2018-02-15@ 01:25:46

திருவனந்தபுரம்: கேரளாவில் மார்ச் 1ம் தேதி முதல் பஸ் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மார்ச் 1ம் தேதி முதல் பஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.இதன்படி வரும் 1ம் தேதி முதல், குறைந்தபட்ச கட்டணம் டவுன் பஸ்களில் ரூ7ல் இருந்து ரூ.8 ஆக உயர்கிறது. பாஸ்ட் பாசஞ்சர் பஸ்களில் ரூ. 10ல் இருந்து ரூ. 11 ஆகவும், தொலைதூர பஸ்களில் கிலோ மீட்டருக்கு 64 பைசாவில் இருந்து 70 பைசாவாகவும், எக்ஸ்சிகியூட்டிவ் சூப்பர் எக்ஸ்பிரஸ் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 13ல் இருந்து ரூ. 15 ஆகவும் உயர்த்தப்படுகிறது. சூப்பர் டீலக்ஸ் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 22 ஆகவும், ஹைடெக் ஏசி பஸ்களில் ரூ.44 ஆகவும், வால்வோ பஸ்களில் ரூ.45 ஆகவும் குறைந்தபட்ச கட்டணம் உயர்த்தப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்