SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விந்து தானம் மூலம் பிறந்த குழந்தைக்கு தந்தை பெயர் இன்றி பிறப்பு சான்றிதழ் வழங்க இளம்பெண் வழக்கு

2018-02-15@ 01:24:57

மும்பை: ‘விந்து தானம் மூலம் செயற்கை கரூவூட்டல் முறையில் பிறந்த குழந்தைக்கு தந்தை பெயர் குறிப்பிடாமல் பிறப்பு சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்’ என மும்பை உயர் நீதிமன்றத்தில் திருமணம் ஆகாத பெண் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  மும்பை உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் திருமணம் ஆகாத பெண். தெரியாத நபரிடம் இருந்து பெறப்பட்ட விந்தணு மூலம் செயற்கை கருவூட்டல் முறையில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தை பெற்றேன். குழந்தையை வளர்க்க எனக்கு வசதி உள்ளது. ஆனால், பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் இடம் பெறக்கூடாது. எனக்கு குழந்தையின் தந்தை பெயரை தெரிவிக்க விருப்பம் இல்லை. அதை பதிவு செய்யும்படி என்னை வலியுறுத்தக் கூடாது. இது தொடர்பாக பிரிகன் மும்பை மாநகராட்சிக்கு (பிஎம்சி) நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு எந்த பதிலும் இல்லை.

உச்ச நீதிமன்றம் 2015ம் ஆண்டு அளித்த தீர்ப்பு ஒன்றில், ‘திருமணம் ஆகாத தாய்/ஒற்றை பெற்றோர் தனது குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால், அது தொடர்பான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும் படி மட்டுமே கேட்க வேண்டும்’ என கூறியுள்ளது. இந்த உத்தரவு பிரிகன்மும்பை மாநகராட்சிக்கும் பொருந்தும். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் செயல்படவில்லை. எனது குழந்தைக்கு தந்தையின் பெயர் இல்லாமல் பிறப்பு சான்றிதழ் வழங்க பிஎம்சிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை விசாரித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘வரும் மார்ச் மாதம் நடைபெறும் அடுத்த விசாரணையில் பிறப்பு ஆவண பதிவேட்டை பிஎம்சி நிர்வாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாக இதற்கு முன்பு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கும் பிஎம்சி பதில் அளிக்கவில்லை. இதற்கு மேலும் அவகாசம் வழங்கப்படாது’ என கூறியுள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bunfestival

    ஹாங்காங்கில் பார்வையாளர்கள் வியக்க வைக்கும் ரொட்டி திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • metrochennai

    சென்னையில் நேரு பூங்கா முதல் சென்ரல் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

  • protest_chennai123

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

  • satteravai_stalin11

    சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

  • PakistanistudentUSgunshot

    அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்