SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயிர் தியாகம் செய்த வீரர்கள் மதத்தால் அடையாளம் காணப்படுவது இல்லை : ஓவைசிக்கு ராணுவம் பதிலடி

2018-02-15@ 01:24:12

புதுடெல்லி: ‘‘நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை, ராணுவத்தில் மதத்தால் அடையாளம் காண்பதில்லை’’ என ராணுவ வடக்கு மண்டல தளபதி தேவராஜ் கூறியுள்ளார்.  காஷ்மீர் மாநிலம் சஞ்சுவானில் உள்ள ராணுவ முகாம் மீது சமீபத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 4 வீரர்கள் காஷ்மீர் முஸ்லிம்கள். பலியான வீரர் ஒருவரின் தந்தையான குலாம் முகைதீன் ஷேக்கும்  இந்த தாக்குதலில் பலியானார்.  இந்நிலையில், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசி நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானியர்கள் என கூறுபவர்கள், இச்சம்பவத்தில் இருந்து பாடம் கற்க வேண்டும். நாட்டுக்காக முஸ்லிம்களும் உயிர் தியாகம் செய்கின்றனர்’ என குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்துள்ள ராணுவ வடக்கு மண்டல தளபதி தேவராஜ் அன்பு, ‘‘உயிர் தியாகம் செய்த வீரர்களை நாங்கள் மதத்தால் அடையாளம் காண்பதில்லை. ராணுவம் பற்றி நன்கு தெரியாதவர்கள்தான் இது போன்ற கருத்துகளை வெளியிடுகின்றனர்’’ என்றார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X