SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஸ்களை புறக்கணித்த மக்கள் ... புறநகர் ரயிலில் ஒரு மாதத்தில் 10 லட்சம் பேர் பயணம்

2018-02-15@ 00:32:54

சென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு மக்கள் மாநகர பஸ்களில் பயணம் செய்வதை ஏறக்குறைய புறக்கணித்துவிட்டனர். இதனால் புறநகர் ரயில்களில் ஜனவரி மாதம் மட்டும் 10 லட்சம் பேர் பயணித்துள்னர். இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காகித பயணச்சீட்டு பயன்பாடுகளை குறைக்கும் வகையில் ரயில்வேயில் ஸ்மார்ட் செல்போன்களில் மொபைல் ஆப்களை பயன்படுத்தி பயணச்சீட்டுகளை எடுக்கும் வசதி அறிமுகமானது. முதலில் 2015 ஜனவரியில் சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே உள்ள ரயில் நிலையங்களிலும்  பின்னர் திருமால்பூர், திருத்தணி, சூலூர்பேட்டை வழித்தடங்களில் உள்ள ரயில்நிலையங்களிலும் இந்த வசதி பயன்பாட்டுக்கு வந்தது.

இப்போது சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள 90 புறநகர் ரயில் நிலையங்களில் உள்ள இந்த வசதியை பயன்படுத்தி 700 புறநகர் ரயில்களில் பயணிக்க முடியும்.இப்படி மொபைல் ஆப் மூலம் பயணச்சீட்டு வாங்குபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் பேருந்துக் கட்டண உயர்வுக்கு பிறகு அதிகரித்துள்ளது. அதிலும் இதுவரை இல்லாத அளவுக்கு ஜனவரி மாதம் மட்டும் 10 லட்சம் பேர் மொபைல் ஆப் மூலம் பயணச்சீட்டு எடுத்து புறநகர் ரயில்களில் பயணித்துள்ளனர். இது வழக்கத்தை விட 36 சதவீதம் அதிகமாகும்.

இப்போது, சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், தாம்பரம், சென்னை கடற்கரை, கிண்டி ரயில் நிலையங்களில் மொபைல் ஆப் மூலம் எடுத்த பயணச்சீட்டுகளை காகிதத்தில் அச்செடுக்கும் வசதியாக இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாநகர பஸ்களில் கட்டணம் அதிகரித்ததால் பொதுமக்கள், பஸ் பயணத்தையே சென்னையில் தவிர்த்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும்பாலான பஸ்கள் காலியாகவே ஓடுகிறது. இதனால் போக்குவரத்து கழகத்துக்கு தினந்தோறும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று கண்டக்டர்களே கூறுகின்றனர். எனவே, வருவாய் இழப்பை சரி செய்ய தமிழக அரசு மீண்டும் பஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்