SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவர்கள் மனஅழுத்தம் போக்க பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

2018-02-15@ 00:14:42

சென்னை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் மனஅழுத்தம், பயத்தை போக்குவதற்காக பேஸ் புக், வாட்ஸ் அப் மூலம் விழிப்புணர்வு பிரசார திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக பள்ளிக்கல்வித்துறையும், தி லேடு அமைப்பும் இணைந்து 2018ம் ஆண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் தேர்வு குறித்து மனஅழுத்தம், கவலை, பயத்தை அகற்ற விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும். இந்த திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். தி லேடு அமைப்பு மாணவர்கள், பெற்றோரின் பயம், குழப்பங்களை நீக்கி சரியான தீர்வுகளை வழங்க உள்ளது. இதற்காக மனநலம் சார்ந்த ஆலோசகர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்துறை வல்லுனர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாணவர்கள், பெற்றோர் தங்களின் சிக்கல்களை டிவிட்டர், முகநூல், வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களை உற்சாகப்படுத்தவும், மனஅழுத்தத்தில் இருந்து விடு0படுவதற்காக ஊடகங்கள், பத்திரிகைகளில் வெளியான கருத்துக்களை மாணவர்களுக்கு அளிப்பதற்கு ஏற்பாடுகளை தி லேடு நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. கீழ்க்கண்ட சமூக வலைதள பக்கங்கள், இ மெயில் முகவரி, வாட்ஸ் அப் எண்ணில் மாணவர்கள், பெற்றோர் இந்த சேவையை பெறலாம். 7373002426 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், Tamil Nadu Govt Exam Stress Relief என்ற முகநூல் பக்கத்திலும், @TNSchoolEduDept என்ற டிவிட்டர் பக்கத்திலும், ednstressrelief@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலமும் இந்த சேவையை மாணவர்கள் பெறலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

  • mexicoblast

    மெக்ஸிகோவில் எண்ணெய் குழாய் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு!

  • 21-01-2019

    21-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்