SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டவிரோத பணபரிமாற்றம் மூலம் ரூ.11,360 கோடி மோசடி : நகை வியாபாரியிடம் சிபிஐ விசாரணை

2018-02-15@ 00:10:33

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை கிளையில் ரூ.11,360 கோடி மோசடி நடந்துள்ளது.  தென் மும்பை பிரீச்கேண்டியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் நடந்த இந்த மோசடி நேற்றுதான் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சி.பி.ஐ.யிடம் புகார் செய்த வங்கி அதிகாரிகள் அது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். ஒரு சில வர்த்தகர்கள் பயன் பெறத்தக்க வகையில் சட்டவிரோதமாக பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 இந்த வர்த்தகர்கள் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் செய்பவர்கள். வர்த்தகம் மூலம் பிறருக்கு கிடைக்கும் பணத்தை நம்பி பஞ்சாப் நேஷனல் வங்கி இவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை கடனாக கொடுத்துள்ளது. இதை பார்த்து வேறு வங்கிகளும் இவர்களுக்கு பெரும் தொகையை கடனாக வழங்கியுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி செய்த நபர்களின் பெயர்களை பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிடவில்லை.  இதுதொடர்பாக மும்பையில் உள்ள பிரபல தங்கம் மற்றும் வைர நகை வியாபாரி நீரவ் மோடியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். நீரவ்மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த வாரம் ரூ.280 கோடி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர். அவரிடம் தீவிரமாக பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே, ரூ.280 கோடி மோசடி தொடர்பாக நீரவ் மோடி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது.

யார் இந்த நீரவ் மோடி?

48 வயதான நீரவ் மோடி, மிகப்பெரிய வைர வியாபாரி. இவரது சொத்து மதிப்பு சுமார் 173 கோடி டாலர் (சுமார் ரூ.11,072 கோடி). 2017ம் ஆண்டு போர்ப்ஸ் பணக்காரர் பட்டியலில் 84வது இடம் பிடித்தவர். டெல்லி, மும்பை உட்பட 16 இடங்களில் இவரது கடைகள் உள்ளன.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்