SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவின் எப்-22க்கு போட்டியாக ஜே-20 போர் விமானம் சீன படையில் சேர்ப்பு

2018-02-15@ 00:09:03

பீஜிங்: அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா தயாரித்துள்ள ஜே-20 அதிநவீன போர் விமானங்கள், அந்நாட்டு விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் அதிநவீன போர் விமானமான எப்-22 ராப்டாரை எதிர்கொள்ளும் வகையில், சீனா தனது விமானப்படைக்காக ஜே-20 என்ற நவீன போர் விமானத்தை தயாரித்துள்ளது. எதிரிகளை குண்டுவீசி தாக்கவும், வானில் எதிரி போர் விமானங்களை இடைமறித்து தாக்கும் திறனுடன் இந்த விமானங்கள் உருவாக்கப்பட்டு, படையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை போருக்கு முழு அளவில் தயாராக உள்ளதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சீனாவில் சின்சுவா நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்தியில், ‘ புதுவகை தொழில்நுட்பங்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள ஜே-20 விமானங்களில்  ரேடார் சிக்னல்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், எதிரிகளின் கண்ணில்  சிக்காமல் இவை மிகுந்த சவாலாக இருக்கும். ஜே-20 விமானங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள போதிலும், எப்-22 விமானத்துக்கு சமமாக இதன் திறன் இல்லை. அமெரிக்க போர் விமானங்களின் சவாலை  ஜே-20 பூர்த்தி செய்யாது. எனவே, டபிள்யூ.எஸ்-15 இன்ஜின்கள் தயாராகும் வரை ஜே-20 போர் விமானங்களை அதிகளவில் உற்பத்தி செய்ய மாட்டோம் என  ராணுவம் கூறியுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X