SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை இந்தியா நம்பர் 1

2018-02-15@ 00:08:42

துபாய்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் 73 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியது.
தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றி சாதனை படைத்த கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, 122 புள்ளிகளுடன் நம்பர் 1 அந்தஸ்தை மீண்டும் வசப்படுத்தியது. தென் ஆப்ரிக்க தொடருக்கு முன்பாக 2வது இடத்தில் இருந்த இந்தியா, ஹாட்ரிக் வெற்றியுடன் முதலிடத்தை பிடித்த நிலையில் 4வது போட்டியில் தோற்றதால் பின்தங்க நேரிட்டது. போர்ட் எலிசபத்தில் நேற்று முன்தினம் நடந்த விறுவிறுப்பான 5வது ஒருநாள் போட்டியில் அபாரமாக வென்ற இந்தியா 4-1 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றதுடன் முதல் முறையாக தொடரையும் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

இந்த வெற்றி இந்திய அணிக்கு முதலிடத்தை உறுதி செய்தது. 6வது மற்றும் கடைசி போட்டியில் தோற்றால் கூட இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த மண்ணில் 2001ம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்துள்ள தென் ஆப்ரிக்க அணி 118 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்து (116), நியூசிலாந்து (115), ஆஸ்திரேலியா (112) அடுத்த இடங்களில் உள்ளன.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்