SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரலாற்று சாதனை படைத்ததில் மகிழ்ச்சி...

2018-02-15@ 00:08:41

போர்ட் எலிசபத்: தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.
போர்ட் எலிசபத் செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது. ரோகித் ஷர்மா 115, கோஹ்லி 36, தவான் 34, ஷ்ரேயாஸ் 30 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 42.2 ஓவரில் 201 ரன்னுக்கு சுருண்டு 73 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அம்லா 71, கேப்டன் மார்க்ராம் 32, மில்லர் 36, கிளாசன் 39 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்திருந்த தென் ஆப்ரிக்கா, மேற்கொண்டு 35 ரன் மட்டுமே சேர்த்து கடைசி 6 விக்கெட்டை பறிகொடுத்தது.

இந்திய பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4, சாஹல், ஹர்திக் தலா 2, பூம்ரா 1 விக்கெட் வீழ்த்தினர். ரோகித் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்திய அணி 4-1 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது. 1992ல் முதல் முறையாக தென் ஆப்ரிக்கா சென்று விளையாடியதில் இருந்து 25 ஆண்டுகளாக அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த ஒரு தொடரிலும் வெற்றி பெற முடியாமல் தவித்து வந்த இந்திய அணிக்கு, கோஹ்லி தலைமையிலான அணி முதல் வெற்றியை வசப்படுத்தி அசத்தியுள்ளது. முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், எம்.எஸ்.டோனி தலைமையிலான அணிகள் சாதிக்க முடியாததை தற்போதைய அணி சாதித்து பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

இந்த மகத்தான வெற்றி குறித்து கேப்டன் கோஹ்லி கூறுகையில், ‘தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது வீரர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து வகையிலும் ஒருங்கிணைந்த சிறப்பாக செயல்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். இந்திய அணி தொடர்ச்சியாக 9 ஒருநாள் போட்டித் தொடர்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iraqbikersride

  ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

 • niagarafallssnow

  கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

 • SiddhagangaSivakumarasamy

  பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

 • govindpmawards

  பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்