SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தவானை வழியனுப்பிய ரபாடாவுக்கு அபராதம்!

2018-02-15@ 00:08:39

இந்திய அணியுடன் நடந்த 5வது ஒருநாள் போட்டியின்போது, தொடக்க வீரர் ஷிகர் தவானை பவுன்சர் பந்துவீச்சில் அவுட்டாக்கிய தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா அவரை பெவிலியன் திரும்புமாறு சைகை காட்டினார். விதிமுறைகளை மீறி தரக்குறைவாக நடந்து கொண்ட ரபாடாவின் செயல் குறித்து ஐசிசிபோட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவருக்கு போட்டிக்கான ஊதியத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டதுடன், மோசமான நடத்தைக்காக 1 டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது. இதுவரை 5 டிமெரிட் புள்ளிகள் பெற்றுள்ள ரபாடா, 2019 பிப்ரவரி 2வது வாரத்துக்குள் இந்த எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தால் 2 டெஸ்ட் போட்டிகள் அல்லது ஒரு டெஸ்ட், 2 ஒருநாள்/டி20 அல்லது 4 ஒருநாள்/டி20 போட்டிகளில் தடை விதிக்கப்படும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்