SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷித் கான் அபார பந்துவீச்சு ஆப்கானிஸ்தான் முன்னிலை

2018-02-15@ 00:08:36

ஷார்ஜா: ஜிம்பாப்வே அணியுடன் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 2-1 என முன்னிலை பெற்றது.
ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஜிம்பாப்வே 34.3 ஓவரில் 154 ரன்னுக்கு சுருண்டது. எர்வின் 39, சிக்கந்தர் 38, சாலமன் மையர் 22 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் ரஷித் கான் 8.3 ஓவரில் 1 மெய்டன் உட்பட 24 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முஜீபுர் ரகுமான் 3, தவ்லத், குல்பாதின் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 27.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து வென்றது. ரகமத் ஷா 58, நசீர் ஜமால் 51 ரன் விளாசினர். ரஷித் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரின் ஆப்கானிஸ்தான் 2-1 என முன்னிலை வகிக்க, 4வது போட்டி நாளை நடைபெறுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X