SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயிலாப்பூரில் பெண்ணிடம் செயின் பறித்த வாலிபருக்கு தர்மஅடி

2018-02-15@ 00:08:17

சென்னை: சென்னை மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி நிர்மலா (65). இவர் நேற்று முன்தினம் இரவு காரணீஸ்வரர் கோயில் 2வது லேன் பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, ைபக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் நிர்மலாவிடம் முகவரி கேட்பது போல், திடீரென அவர் அவர் கழுத்தில் கிடந்த 9 சவரன் தாலி செயினை பிடித்து இழுத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நிர்மலா திருடன்.. திருடன்.. என அலறினார். அந்த பெண்ணின் சத்தைத்தை கேட்ட ெபாதுமக்கள் ஓடிவந்தனர். இதை சற்றும் எதிர்பாராத மர்ம நபர் பைக்குடன் தப்ப நினைத்தார். அதற்குள் அந்த வாலிபரை சூழ்ந்த மக்கள் பைக் சாவியை பிடிங்கினர். சிலர் பைக்கை நகர விடாமல் பிடித்து இழுத்து, அந்த நபருக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பல்லவன் நகர் பகுதியை சேர்ந்த சுனில் (19) என்பதும், இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் செயின் பறிப்பு வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சுனிலை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 9 சவரன் தாலி செயின் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்