SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்கத் தூதர் மாமல்லபுரம் வருகை

2018-02-15@ 00:07:55

சென்னை: புதுடெல்லியில் உள்ள இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மாலை 4 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கார் மூலம் சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு வந்தார். அங்குள்ள ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், தலசயன பெருமாள் கோயில், கலங்கரை விளக்கம் ஆகியவற்றை அவர் சுற்றிப் பார்த்தார். அவை உருவாக்கப்பட்ட விதம், உருவாக்கப்பட்ட காலகட்டம், கட்டடக்கலை குறித்த விபரங்களை தொல்லியல் துறை அலுவலர் காயத்ரி விளக்கி கூறினார். இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரின் வருகையை யொட்டி மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. சுப்பராஜா, இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்