SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எக்ஸ்பிரஸ் பாதையில் மின்சார ரயில்கள் இயக்கம்

2018-02-15@ 00:07:39

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பரங்கிமலை-பல்லாவரம் இடையேயான வழித்தடத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 21ம் தேதி வரை பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட ரயில் சேவைகள் வழக்கமான மின்சார ரயில்கள் இயங்கும் வழித்தடத்தில் இயக்கப்படாமல், தாம்பரம்-எழும்பூர் இடையே எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கும் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும், செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும் தாம்பரத்தில் இருந்து எழும்பூர் வரை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. பின்னர் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கம்போல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் வழித்தடத்தில் இயக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்