SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ராஜம்மாள், மனோஜ் பாண்டியன் உள்பட 3 பேருக்கு ஆணையம் சம்மன்

2018-02-14@ 17:37:35

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் 3 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா சமையலர் ராஜம்மாள், ஓட்டுநர் ஐயப்பன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 20-ம் தேதி ஜெயலலிதாவின் சமையலர் ராஜம்மாள், 21-ல் மனோஜ் பாண்டியன், 23-ல் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பன் ஆஜராகுமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த ஆவணங்கள் ரகசியமாக வைக்கப்படும் என விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், கைரேகை பதிவு பெற்ற டாக்டர் பாலாஜி, எம்பார்மிங் செய்த டாக்டர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் நோட்டீஸ் அனுப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் முன்னாள் தலைமைச்செயலாளர்கள் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விளக்கம் அளித்தனர். இதில் கைரேகை பதிவு பெற்ற டாக்டர் பாலாஜி மட்டும் விசாரணை ஆணையத்தின் 3 முறை ஆஜராகியுள்ளார்.

ஏற்கனவே சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். நேற்று இளவரசியின் மகனும் ஜெயா டிவி சிஇஓவுமான விவேக் ஜெயராமன் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தார். இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் 3 பேருக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. ஜெயலலிதா சமையலர் ராஜம்மாள், ஓட்டுநர் ஐயப்பன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆஜராகும் படி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்