SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பூர் நியாவிலைக் கடையில் பிளாஸ்டிக் அரிசி விநியோகிப்பதாக பொதுமக்கள் புகார்!

2018-02-14@ 17:30:45

திருப்பூர்: திருப்பூரில் உள்ள நியாவிலைக் கடையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். திருப்பூர் சூசையாபுரத்தைச் சேர்ந்த ஜெயமேரியிடம் நியாவிலைக் கடை விற்பனையாளர் ராமலிங்கம், 25 கிலோ பொன்னி அரிசியை மூட்டையாக தவணை முறையில் விற்பனை செய்துள்ளார். அவரிடம் 1,220 ரூபாய் மதிப்புள்ள அரிசி மூட்டைக்கு முதலில் 500 ரூபாய் செலுத்தி விட்டு, பின்னர் சிறிதுசிறிதாக பணம் செலுத்துமாறு விற்பனையாளர் கூறியுள்ளார். அந்த அரிசியை வாங்கி வந்து சமைத்தபோது, அரிசி தண்ணீரில் மிதந்ததாகவும், சமைத்த பின்னர் சாதம் வழக்கம்போல இல்லை எனவும் கூறப்படுகிறது.

உடனே ஜெயமேரி இதுகுறித்து நியாய விலைகடையில் பணியாற்றும் ஊழியரிடம் கேட்டுள்ளார், அதற்கு கடை ஊழியர் வாங்கி சென்ற அரிசியை மாற்ற முடியாது என்று கூறியுள்ளார். எனவே திருப்பூர் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஜெயமேரி புகார் அளித்துள்ளார். சமைத்த சாதத்தை உருட்டி சுவற்றில் அடித்தபோது, அந்த உருண்டை உடையவில்லை என்றும், தீயில் காட்டியபோது எரிந்ததாகவும் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நியாயவிலைக்கடையில் அரிசிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-05-2018

    28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்