SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேருந்து கட்டணத்தை உயர்த்த கேரள அமைச்சரவை ஒப்புதல்: குறைந்தபட்ச கட்டணம் ரூ.8ஆக நிர்ணயம்

2018-02-14@ 17:00:14

திருவனந்தபுரம்: தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.8ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கி வருவதால் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும், கேரளாவில் உள்ள தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினரும் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசை வற்புறுத்தி வருகின்றனர். பேருந்து கட்டணத்தை உயர்த்தாவிட்டால் வருகிற 16ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் கேரள அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பேருந்து கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளின்படி டவுன் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.7ல் இருந்து ரூ.8 உயர்கிறது. விரைவு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயில் இருந்து 11 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதேபோல் சூப்பர் எக்ஸ்பிரஸ், சூப்பர் டீலக்ஸ், ஹைடெக் லக்சூரி ஏசி, ஏசி வால்வோ ஆகிய பேருந்துகளிலும் 10 சதவீதம் வரை கட்டண உயர்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X