SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த வழக்கு: மத்திய அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

2018-02-14@ 15:21:31

மதுரை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து ஜூன் 14-க்குள் பதில் தர மத்திய அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காலதாமதம் ஆவதற்கு காரணம் என்ன என்றும் மத்திய அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் எங்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கேள்வி எழுப்பினார். மத்திய அரசு மீது கே.கே.ரமேஷ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2015ல் தமிழகம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதில் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இடம் தேர்வு, கட்டுமானம் உள்ளிட்ட ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கி விட்டன. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மத்திய ஆய்வு நடத்தியும் எந்த முடியும் எடுக்கவில்லை. இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு பிரதமர் அலுவலகம் பரிந்துரை கடிதம் எழுதியது. இந்நிலையில் இந்த வழக்கில் பதில் தர மத்திய அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்