SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதலர் தினத்தை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம்: சென்னையில் கழுதைக்கும், நாய்க்கும் திருமணம்

2018-02-14@ 15:11:13

சென்னை: உலகம் முழுவதும் இளைஞர்கள் காதலர் தினத்தை கொண்டாடி வரும் வேலையில் பல்வேறு அமைப்புகள் காதலர் தினத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில் பாரத் இந்து முன்னனி அமைப்பினர் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கழுதைக்கும் நாய்க்கும் திருமணம் செய்து வைத்தனர். நாய் மற்றும் கழுதையை ஊர்வலமாக அழைத்து வந்த அவர்கள், காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நெல்லையில் இந்து முன்னனியினர் சார்பில் நாய்க்கும் நாய்க்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்த நிலையி்ல் காவல்துறையினர் நாய்க்குட்டிகளை பறிமுதல் செய்தனர்.

காதலர்களுக்கு கட்டாய திருமணம் நடத்திவைக்க முயன்ற இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சியில் மலைக்கோட்டை மேல் உள்ள காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என மலை மீது இந்து முன்னனியினர் ஏற முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து எச்சரித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதேபோல வேலூரில் கோட்டைக்கு வரும் காதலர்களுக்கு திருமணம் செய்துவைப்போம் என காத்திருந்த இந்து முன்னனி அமைப்பினர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. பின்னர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X