SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேன்சர் கட்டிகளை அழிக்கும் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

2018-02-14@ 14:00:25

நியூயார்க்: கேன்சர் கட்டிகளுக்கு செல்லும் ரத்தத்தை தடுத்த நிறுத்துவதன் மூலம் கேன்சர் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர். இருதய நோய்க்கு அடுத்தபடியாக அதிக உயிழப்புகளை ஏற்படுத்தும், புற்று நோய்க்கு கீமோதெரபி, அலோபதி போன்ற பல மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டாலும் முழுமையாக குணப்படுத்த இன்றளவும் இயலவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர். அதனை எலியின் உடலில் பரிசோதித்து வெற்றி பெற்றதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த புதிய சிகிச்சையின்படி, முதலில் புற்றுநோய் கட்டிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். உடலில் அடிப்பட்டபோது ரத்தம் வெளியேறுவதை தடுக்க கொடுக்கப்படும் மருந்துகள் இந்த சிகிச்சை முறையில் பயன்படுத்துகின்றன. அவை டி.என்.ஏ. நிறைந்த நானோ ரோபோட்டுகள் மூலம் செலுத்தப்பட்ட உடன் ரத்த ஓட்டம் நிறுத்தப்படும்.

இதனால் கேன்சர் செல்கள் செயலிழந்து, கட்டிகள் சுருங்கிக்கொண்டே இருக்கும். இதனால் கேன்சர் செல்கள் பரவுவதும் குறையும். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகளிடம் செய்த சோதனையில், சிகிச்சைக்கு பிறகு எலிகளின் வாழ்நாள் மற்ற எலிகளை விட இரண்டு மடங்கு அதிகரித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதனை மனிதர்களை போன்ற உடல் உறுப்புகளை கொண்ட பாமா மினியேச்சர் பன்றியின் உடலிலும் சோதனை செய்தனர். விரைவில் மனிதர்களுக்கு இச்சோதனை செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்