SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

2018-02-14@ 13:53:33

மதுரை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தேர்வில் வெற்ற பெற்றவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சிவகங்கையை சேர்ந்த இளமதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 22 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bunfestival

    ஹாங்காங்கில் பார்வையாளர்கள் வியக்க வைக்கும் ரொட்டி திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • metrochennai

    சென்னையில் நேரு பூங்கா முதல் சென்ரல் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

  • protest_chennai123

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

  • satteravai_stalin11

    சட்டப்பேரவை முன் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்ட ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

  • PakistanistudentUSgunshot

    அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்