SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சந்தைக்கு மாடு வரத்து குறைந்தது : விற்பனையும் மந்தம்

2018-02-14@ 12:57:53

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சந்தைக்கு நேற்று, மாடுகள் வரத்து குறைந்ததுடன் கேரள வியாபரிகள் வருகையும் குறைவால், விற்பனை மந்தமாகி குறைந்த விலைக்கு போனது. பொள்ளாச்சியில், வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில்  மாட்டு சந்தை நடக்கும். கடந்த மாதம் வரை சந்தை நாட்களில் சுமார் 1800க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. மேலும், அதனை வாங்க கேரள வியாபாரிகள் வருகையும் அதிகமாக இருந்ததால், மாடு விற்பனை விறுவிறுப்புடன் நடந்ததுடன் கூடுதல் விலைக்கு போனது. ஆனால், நேற்று நடந்த சந்தை நாளின்போது, மாடுவரத்து ஆயிரத்துக்கும் குறைவாகத் தான் இருந்தது. மேலும் கேரள வியாபாரிகள் வருகை குறைவால், மாடுவிற்பனை மந்தமானது.

கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு ரூ.28ஆயிரம் வரை விற்பனையான காளை மாடு, நேற்று ரூ.22ஆயிரம் முதல் ரூ.24ஆயிரம் வரையிலும். ரூ.26ஆயிரத்து விற்பனையான எருமை மாடு ரூ.22ஆயிரத்துக்கும். ரூ.30ஆயிரத்துக்கு விற்பனையான பசுமாடு ரூ.27ஆயிரத்துக்கும், கன்று ரூ.10ஆயிரம் வரையிலும் விற்றது  இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறுகையில்,‘பொள்ளாச்சி சந்தைக்கு, இன்று(நேற்று) நடந்த சந்தைக்கு வழக்கத்தைவிட மாடுகள் வரத்து குறைந்துள்ளது. தற்போது கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி நோன்பு கடைபிடிப்பு துவக்கத்தால், கேரளாவில் மாட்டுக்கறி விற்பனை குறையும். இதனால், இந்த வாரத்தில் கேரள மாநில வியாபாரிகளின் வருகை குறைந்து விட்டது. இதனால் மாடுகள் விற்பனை வழக்கத்தைவிட மந்தமாகி, குறைந்த விலைக்கு விற்றது’, என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்