SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதலர்களை கவரும் ‘கொய் மலர்’ : கொடைக்கானலில் விளைச்சல் அமோகம்

2018-02-14@ 12:56:14

கொடைக்கானல்: காதலர்களை கவரும் கொய் மலர்கள் விற்பனை கொடைக்கானலில் அமோகமாக உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் காதல் மலர்கள் என அழைக்கப்படும் கொய் மலர்கள் (CORNATION FLOWER) அதிகளவில் பயிரிடப்படுகிறது. வெள்ளை, சிகப்பு, மஞ்சள், ரோஸ் என 10க்கும் மேற்பட்ட வண்ணங்களில் இம்மலர்கள் பூக்கின்றன. ஒரு வாரம் வரை வாடாமல் இருப்பதால் இம்மலர்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெரு நகரங்களுக்கும், பெங்களூர், மும்பை, கோல்கட்டா, டில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள பெருநகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இன்று காதலர் தினம் என்பதால் கடந்த ஒரு வாரமாக கொய் மலர்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘கொய் மலர்களை உற்பத்தி செய்ய ஒரு ஏக்கர் நிலத்திற்கு 10க்கும் குறைவான வேலையாட்கள், சொட்டு நீர் பாசனமுறை, குறைந்த பராமரிப்பு செலவு என அனைத்துமே எளிதாகவே உள்ளது. சாதாரண நாட்களில் ஒரு கொய் மலரின் விலை ரூ.7 முதல் ரூ.10 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படும். தற்போது காதலர் தினத்தையொட்டி கடந்த ஒரு வாரமாக ஒரு மலரின் விலை ரூ.15 வரை விலை போகிறது’’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்