SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

119 வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட போலீஸ் மோப்ப நாய் மரணம் : பயிற்சியாளர்கள் கண்ணீர் அஞ்சலி

2018-02-14@ 12:55:16

கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் மோப்ப நாய் பிரிவு உள்ளது. இங்கு போலீஸ் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வெளிமாவட்டங்களை சேர்ந்த போலீஸ் மோப்ப நாய்களுக்கும் இங்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்குள்ள மோப்ப நாய்களுக்கு வெடிகுண்டு கண்டறிதல், போதை பொருள் கண்டறிதல், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதேபோல்,  பணி ஓய்வு பெற்ற மோப்ப நாய்களும் இங்கு பராமரிக்கப்படுகிறது. இந்த மோப்ப நாய் பிரிவில் பணி ஓய்வு பெற்ற அம்மு, சித்ரா, டயானா, சாரு ஆகியவை பராமரிக்கப்பட்டு வந்தது. இதில் 11 வயதான அம்மு என்ற மோப்ப நாய் கடந்த 2008ம் ஆண்டு முதல் கோவை மாநகர போலீஸ் பிரிவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் மோப்ப நாய் அம்மு பணி ஓய்வு பெற்று, இங்கு பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரமாக முதுமையின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த மோப்ப நாய் அம்மு, நேற்று பரிதாபமாக இறந்தது. இறந்த மோப்ப நாய் அம்முவுக்கு குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள், மோப்ப நாய் பிரிவு பயிற்சியாளர்கள் கண்ணீர் மல்க மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், மோப்ப நாய் பிரிவு வளாகம் அருகேயுள்ள காலியிடத்தில் குழி தோண்டப்பட்டு இறந்த மோப்ப நாய் அம்முவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.   இறந்த மோப்ப நாய் அம்மு இதுவரை கொலை, கொள்ளை உள்ளிட்ட 119 வழக்கு தொடர்பான புலனாய்வுகளுக்காக போலீசாரால் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்