SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீவனப்பற்றாக்குறையால் நாட்டு பசும்பால் உற்பத்தி குறைவு : பாக்கெட் பாலுக்கு மாறிய மக்கள்

2018-02-14@ 12:54:29

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வறட்சி, நாட்டுமாடுகளின் வளர்ப்பு குறைவு  காரணமாக பசும் பால் உற்பத்தி குறைந்து விட்டதால் பொதுமக்கள் பாக்கெட் பாலை வாங்கி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் குறைந்தது சுமார் 50 பசு முதல் 100 பசுமாடுகள் இருக்கும். இதற்கான தீவனங்கள் கிராமங்களில் வயல்வெளிகளில் கிடைக்கும் புல்களை அறுத்து மாட்டிற்கு கொடுப்பார்கள். மேலும் வைக்கோல்களையும் தீவனமாக கொடுப்பார்கள். இதற்காக பெரிய அளவில் செலவு வராது. இதனால் கிராமத்தில் உள்ளவர்கள் பால் பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்த மாட்டார்கள். மேலும் கிராமங்களில் சுத்தமான மாட்டுபாலை பால் வியாபாரிகள் வாங்கி நகர் பகுதியில் வீடு வீடாக கொண்டு சென்று விற்பனை செய்வார்கள். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து வறட்சி ஏற்பட்டுள்ளதால் வயல்களில் புல்கள் இல்லை.
 
விவசாயம் பொயத்து போனதால் மாட்டிற்கு வைக்கோல் தீவனம் கிடைக்கவில்லை. இதனால் பெருவாரியான விவசாயிகள் தங்களின் மாடுகளை விற்று விட்டனர். இதனால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துவிட்டது. இது ஒரு புறம் இருக்க வங்கியில் லோன், சுயஉதவிகுழுவில் லோன்களை பெற்று நாட்டுமாடுகளுக்கு பதிலாக ஜெர்சி, சிந்து மாடுகளை வாங்கி கிராமத்தில் பால் விற்பனை செய்து வந்தனர். இந்த வகை மாடுகள் நல்ல முறையில் பால் தந்தாலும் பிறகு சினை பிடிக்க வைப்பதில் பெரிய சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக நாட்டு மாடுகளுக்கு ஒரு முறை கால் நடை மருத்துவமனைக்கு சென்று சினை ஊசி போட்டால் சினை பிடித்து விடும். ஆனால் சிந்து, ஜெர்சி இன வகை மாடுகளுக்கு 5 முறைக்கு மேல் ஊசி போட்டாலும் சினை பிடிப்பதில்லை.

இதனால் ஒரு கன்றுக்கும் அடுத்த கண்றுக்கும் 2 முதல் நான்கு ஆண்டுகள் இடைவெளி ஏற்படுகிறது. இதனால் இந்த வகை மாடுகளையும் விவசாயிகள் வைத்திருந்து என்ன செய்வது என்று விற்பனை செய்து விடுகின்றனர். இதனால் கிராமங்களில் பால் தட்டுபாடு ஏற்பட்டு பாக்கெட் பாலை வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மேலும் நகர் புறத்தில் மாட்டு பால் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இது குறித்து பால் வியபாரிகள் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் வறட்சி மற்றும் நாட்டு மாடுகளின் வளர்ப்பு குறைவால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தினசரி நாங்கள் கொடுத்த வீடுகளுக்கு கூட பால் கொடுக்க முடியவில்லை. இதனால் அந்த வீடுகளில் உள்ளவர்கள் மாலை நேரங்களில் பாக்கெட் பாலை வாங்கி சமாளித்து கொள்கின்றனர் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

  • mexicoblast

    மெக்ஸிகோவில் எண்ணெய் குழாய் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு!

  • 21-01-2019

    21-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்