கடல் கடந்தும் காதல் பரிமாற்றம் : காதலர் தின ‘பொக்கே’ ரூ.3 ஆயிரம் ஆக எகிறியது
2018-02-14@ 12:02:48

நெல்லை: காதலர் தினத்தை முன்னிட்டு மலர் பொக்கேகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. நெல்லையில் இரு மடங்காக உயர்ந்த மலர் கொத்துக்கள் அதிகபட்சமாக 3 ஆயிரம் ரூபாய்க்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் பொக்கே அனுப்பி வாழ்த்து தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று (பிப்.14) கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு ஒருநாள் காதலர்கள் மற்றும் காதலித்து திருமணம் செய்தவர்கள் இந்த நாளை திருவிழாவாக கொண்டாடுகின்றனர். இதில் ரோஜா பூ மற்றும் பல வண்ண மலர்கள் அடங்கிய பூங்கொத்துக்கள் (பொக்கே) முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவருக்கு ஒருவர் இதனை பரிமாறி தங்கள் மகிழ்ச்சியையும் காதலையும் ெவளிப்படுத்துகின்றனர்.
இதற்காக கடந்த ஒரு வாரமாக மலர்கொத்துகள் தயாரிப்பவர்களிடம் ஆர்டர்கள் குவிந்தன. நெல்லையில் பூ சந்தையில் ஊட்டி, ஓசூர், பெங்களூர் ரோஜா பூக்களுக்கு நேற்றே கிராக்கி ஏற்பட்டது. 5 ரூபாய்க்கு விற்பனையான ஒற்றை ரோஜா நேற்று ரூ.20ஆக உயர்ந்தது. இதுபோல் சாதாரண நாட்களில் குறைந்த பட்சம் 50 ரூபாய்க்கு விற்பனையான சிறிய பூங்கொத்துகள் இன்று ரூ.200ஆக விற்பனையாகின்றன. 25 ரூபாய்க்கு விற்பனையான லில்லி பூ இன்று ரூ.50ஆனது. அதிகபட்சமாக குளிர்பிரதேசத்தில் மட்டும் மலரும் பலவண்ண மலர்கள் அடங்கிய பூங்கொத்து ரூ.ஆயிரத்து 500ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த பூக்களை இளம் காதலர்கள், காதலித்து திருமணம் செய்தவர்கள், திருமணம் நிச்சயமானவர்கள் என பலதரபட்டவர்கள் வாங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் பூங்கொத்து ஆர்டர் கொடுத்து இங்குள்ளவர்களுக்கு தயாரிப்பாளர்கள் மூலமாகவே நேரில் அனுப்பி மகிழ்கின்றனர். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் பொக்கேயில் அவர்களது பெயர்களும் விருப்பப்படி வடிவமைத்து கொடுக்கப்படுகிறது. இன்றைய நவீன யுகத்தில் ஸ்மார்ட் போன் மூலம் வீடியோ காலில் பேசிக்கொண்டாலும் பல்வேறு பரிசுகளை அளித்தாலும் மலர்கொத்து பரிசளிப்பதில் பெரும்பாலான காதலர்கள் தனி கவனம் செலுத்துகின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் பொக்கே ஆர்டர் செய்பவர்கள் எண்ணிக்கையும் காதலர் தினத்தன்று வாங்கி செல்பவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
திப்பம்பட்டியிலிருந்து 15 கி.மீ., தூரத்திற்கு புறவழிச்சாலையில் மின் விளக்கு இல்லை
விருதுநகர் புதிய பஸ்நிலையத்தில் இடிந்து விழும் கைப்பிடிச் சுவர்கள்
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் உடல்கள் திருச்சி வந்தது; நிர்மலா சீதாராமன், அமைச்சர்கள் அஞ்சலி
கரையும் காரைகள்... விரிவடையும் விரிசல்கள்... பராமரிப்பு இல்லாத கட்டிடத்தில் சிகிச்சை பெறும் பாலகர்கள்
திண்டிவனம் அருகே அரசு பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அக்னிதீர்த்த கடலில் மலரஞ்சலி
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி