SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டி ஏரியில் விழுந்த மரங்களால் படகு சவாரி செய்பவர்களுக்கு ஆபத்து

2018-02-14@ 12:00:57

ஊட்டி: ஊட்டி ஏரியில் பல இடங்களில் அகற்றப்படாமல் உள்ள மரங்களால் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி விபத்து அபாயமும் தொடர்கிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டி ஏரிக்கு சென்று படகு சவாரி மேற்கொள்கின்றனர். இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பருவமழையின் போது, வீசிய பலத்த சூறாவளி காற்றின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுந்தன. ஊட்டி ஏரியை சுற்றிலும் வளர்ந்துள்ள ராட்சத கற்பூர மரங்களும் ஏரிக்குள் விழுந்தன. இதில், ஒரு சில மரங்கள் மட்டுமே அகற்றப்பட்டன. பெரும்பாலான மரங்களை அகற்றாமல் விட்டுவிட்டனர். இந்த மரங்கள் அனைத்தும் ஏரி கரையோரங்களை ஆக்கிரமித்து ெதாங்கிக் கொண்டிருக்கின்றன. சில மரங்கள் கண்ணிற்கு தெரியாமல் தண்ணீர் மூழ்கி காணப்பட்டது.

தற்போது ஏரியை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஏரியில் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தண்ணீரில் மூழ்கியிருந்த மரங்கள் அனைத்தும் வெளியில் தெரிகிறது. இந்த மரங்கள் ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக உள்ளது மட்டுமின்றி விபத்து ஏற்படும் அபாயமும் நீடிக்கிறது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி ஏரியில் விழுந்த மரங்களை அகற்ற படகு இல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம். மேலும், ஏரியின் கரையோரம் மற்றும் கட்டிடங்களுக்கு நடுவே வளர்ந்துள்ள ராட்சத மரங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்