வேதாரண்யத்தில் இறந்து கரை ஒதுங்கும் ஆலிவர்ரெட்லி ஆமைகள்
2018-02-14@ 11:59:04

வேதாரண்யம்: வேதாரண்யம் கடற்கரையில் நேற்று மூன்று ஆலிவர்ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. நாகை மாவட்டம் வேதாரண்யம் கோடியக்கரை, மணியன்தீவு, புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை ஆகிய பகுதிகளில் டிசம்பர் முதல் மார்ச் வரை பசிபிக் பெருங்கடலில் வசிக்கும் ஆலிவர்ரெட்லி ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்லும். இதனை வனத்துறையினர் எடுத்து பாதுகாத்து கோடியக்கரை ஆறுகாட்டுத்துறையில் உள்ள ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வைத்து 50 நாட்களுக்கு பிறகு குஞ்சு வெளிவந்த பிறகு அதை கடலில் விடுகின்றனர். இந்த ஆண்டு இதுவரை முட்டையிடுவதற்கு வந்த ஆமைகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகளை எடுத்து கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் சென்ற மாதத்தில் இருந்து வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, மணியன்தீவு உள்ளிட்ட பல்வேறு கடற்கரை பகுதிகளில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள் 50 முதல் 100 கிலோ எடையுள்ளதாக இருந்தன. நேற்று வேதாரண்யம் கடற்கரையில் முட்டையிட வந்த மூன்று ஆலிவர்ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியது. இவைகள் படகில் அடிபட்டும், பல்வேறு இயற்கை காரணங்களாலும் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் ஆமைகளை கடற்கரையிலேயே கால்நடை உதவி மருத்துவர் மீனாட்சிசுந்தரம் மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் கடற்கரையிலேயே புதைத்துவிட்டனர். எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது அதிக அளவில் உள்ளது. இந்த ஆமைகளை காப்பதற்கு மீனவர்கள் உதவியுடன் அரசு தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
புதுவைக்கு தற்காலிக கவர்னரை நியமிக்க வேண்டும்: ஜனாதிபதி, உள்துறை அமைச்சருக்கு முதல்வர் நாராயணசாமி கடிதம்
பழிக்குப்பழி வாங்குவோம்: சிஆர்பிஎப் வீரர் கணேஷ்குமார் ஆவேசம்
பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு 266 தேர்வு புதிய மையங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பழநி அருகே ஆயிரம் ஆண்டு பழமையான ராஜராஜ சோழன் கால அரிய நாணயங்கள் கண்டெடுப்பு
நளினி- முருகன் சந்திப்புக்கு தடை
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க கிராமத்தை தத்தெடுக்கும் வேளாண் பல்கலை கழகம்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு