SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோராபுதீன் என்கவுண்டர் வழக்கில் நீதித்துறை தோல்வி : முன்னாள் நீதிபதி பேட்டியால் பரபரப்பு

2018-02-14@ 11:57:15

புதுடெல்லி: சோராபுதீன் என்கவுண்டர் வழக்கில் நீதித்துறை தோல்வியடைந்துவிட்டதாக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோராபுதீன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீதான வழக்கை விசாரிக்க வந்தவர் ஓய்வு பெற்ற மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அபே எம். திப்சே. இவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சோராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் சாட்சியங்களை பலவீனப்படுத்தும் முயற்சி தான் நடக்கிறது என்று கூறியுள்ளார்.

சோராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் நீதித்துறை தோல்வியை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குஜராத்தில் நடந்த சோராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் சில அரசியல் தலைவருக்கு தொடர்பு இருந்ததாக புகார் கூறப்பட்டது. இதனை விசாரித்து வந்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்தது தற்போதும் சர்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்