SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உணவு தேடி பட்டப்பகலிலேயே ஊருக்குள் நுழையும் யானைகள்

2018-02-14@ 11:55:43

ஓசூர்:  ஓசூர் பகுதியில் சுற்றித்திரியும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பட்டப்பகலிலேயே கால்நடைகள் போல் உணவு தேடி ஊருக்குள் நுழையும் யானைகளால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த யானைகள், கிருஷ்ணகிரி மாவட்ட காடுகளில் தஞ்சமடைந்துள்ளன. இதில், 65 யானைகள் ஓசூர் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன. நேற்று அதிகாலை மீண்டும் 10 யானைகள் புதியதாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து வந்ததால், யானைகளின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர ஒற்றை யானை ஒன்று கோபசந்திரம் பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த யானை பெங்களூரு கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயே சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே அப்பகுதியை கடக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 75 யானைகள், பல பிரிவுகளாக பிரிந்து சுற்றுகின்றன. நேற்று முன்தினம் பீர்ஜேப்பள்ளி பகுதியில் தக்காளி தோட்டத்தை சேதப்படுத்தின. மற்றொரு பிரிவு யானைகள் நேற்று அதிகாலை ராமாபுரம் கிராமத்திற்குள் புகுந்து சுமார் 4 ஏக்கர் பரப்பில் பயிர்களை துவம்சம் செய்தன. பாத்தக்கோட்டா பகுதியில் 8 யானைகள் முட்டைகோஸ் தோட்டத்தையும், பிள்ளைக்கொத்தூர் அருகே 10 யானைகள் பச்சை மிளகாய் தோட்டத்தையும் பதம் பார்த்துள்ளன. இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறியதாவது: ஓசூர் பகுதியில் காலை மற்றும் மாலை வேளையில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது.

இதனால், காலை வெகு நேரமானாலும் யானைகள் வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய நிலங்களிலேயே சுற்றுகின்றன. முன்பெல்லாம் இரவு நேரத்தில் மட்டும் தான், உணவு தேடி யானைகள் ஊருக்குள் வரும். தற்போது, யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தேவையான உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காய்ந்து போன இலை, தழைகள் யானைகளுக்கு போதுமானதாக இருப்பதில்லை. வேறு வழியின்றி அதனை சாப்பிட்டாலும் அதிகளவில் தாகம் ஏற்படுகிறது. தண்ணீர் தேடி வனப்பகுதியில் வழக்கமாக செல்லும் நீர்நிலைகளுக்கு போய் பார்த்தால் வறண்டு போய் இருந்த இடம் தெரியாத நிலையில் தான் உள்ளது. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை கூட்டம் பட்டப்பகலிலேயே ஊருக்குள் வருகின்றன. கால்நடைகள் போல் ஊருக்குள் சர்வசாதாரணமாக நடமாடும் நிலை உருவாகியுள்ளது. இந்த ஜீவாதார போராட்டத்தில் அப்பாவி விவசாயிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்