SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூக்கள் விலை சரிவு

2018-02-14@ 02:30:29

பாவூர்சத்திரம்: சிவகாமிபுரம் பூ மார்க்கெட்டில், விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்தம் காரணமாக பூக்கள் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.நெல்லை மாவட்டபாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர்  ஒன்றியத்தில் சிவகாமிபுரம் பூ மார்க்கெட்டுக்கு சுற்றுப்புற பகுதிகளில் இருந்து மல்லி, பிச்சி,  கனகாம்பரம், சம்மங்கி, மஞ்சள் கேந்தி, துளசி, ரோஜா, முல்லைப்பூ, அரளிப்பூக்களை விவசாயிகள் கொண்டு வரகின்றனர். இங்கிருந்து கேரளா, நெல்லை, சங்கரன்கோவில், தென்காசி மற்றும்  சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பூ வியாபாரிகள் தேவைக்கேற்ப ஏலம் எடுத்து செல்கின்றனர்.
 
 தற்போது வரத்து அதிகரிப்பு, மாசி மாத  பிறப்பு மற்றும் விற்பனையில் மந்தம் காரணமாக சில நாட்களுக்கு முன் கிலோ 800 ரூபாய்க்கு விற்ற மல்லி, நேற்று 700க்கும், 1000 ரூபாய்க்கு விற்பனையான பிச்சிப்பூ ரூ.900க்கும் விலை போனது. கேந்தி 35ல் இருந்து 30க்கும், செவ்வந்தி  120லிருந்து 100க்கும், சம்மங்கி ரூ.200ல் இருந்து ரூ.150க்கும், ரோஜா 25ல்  இருந்து 20க்கும், துளசி ரூ.20க்கும், காக்காட்டான் 400லிருந்து  ரூ.300க்கும் விற்பனையானது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்